வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

தமிழர்கள் மீது பாலியல் கொடுமைகள்: மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை வெளியீடு



லங்கை பாதுகாப்பு படையினரால் தமிழர்கள் மீது பாலியல் கொடுமைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறுப்படும் அறிக்கை ஒன்று எதிர்வரும் திங்களன்று வெளிவரவுள்ளது. 140 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையில், இடம்பெற்றுள்ள 75 பேரின் சாட்சியங்களில், மூவரினது சாட்சியங்களை மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பிலுள்ள தனது வீட்டில் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பிடித்துச் செல்லப்பட்ட 31 வயதுடைய தமிழ்ப்பெண் தெரிவித்துள்ள சாட்சியத்தில், 'கொழும்பில் நான்காம் மாடியில் உள்ள குற்றப்புலனாய்வு பிரிவு பணியகத்துக்கு நான் கொண்டு செல்லப்பட்டேன். எனக்கு குடிக்க நீரோ, உணவோ தரப்படவில்லை. அடுத்த நாள், சீருடை அணிந்த ஒரு அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் என்னைப் படம் பிடித்தனர். எனது கைவிரல் அடையாளங்களை பதிவுசெய்தனர். வெற்றுத்தாளில் எனது கையொப்பத்தைப் பெற்றுக் கொண்டனர். எனது கணவர் பற்றிய எல்லா விபரங்களையும் தாம் வைத்துள்ளதாகவும், அவர் எங்கே பதுங்கியுள்ளார் என்ற விபரத்தை கூறிவிடுமாறும் அவர்கள் என்னிடம் கேட்டனர். எனது கணவர் வெளிநாடு சென்று விட்டதாக அவர்களுக்கு கூறினேன். அவர் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக, அவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டினர். பல்வேறு பொருட்களால் நான் தாக்கப்பட்டேன். விசாரணையின்போது, சிகரெட்டினால் சுடப்பட்டேன். மணல் நிரப்பிய குழாயினால் தாக்கப்பட்டேன். அடித்துக் கொண்டே எனது கணவர் பற்றிய விபரங்களை கேட்டனர். ஒரு இரவில் நான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டேன். 2012 ஓகஸ்ட் மாதம் பிடிக்கப்பட்ட இன்னொரு 23வயது இளைஞரின் சாட்சியத்தில், 'அவர்கள் எனது கண் கட்டை அவிழ்த்து விட்டபோது, நான் ஒரு அறைக்குள் இருப்பதை கண்டேன். அங்கு மேலும் நால்வர் இருந்தனர். நாற்காலி ஒன்றுடன் சேர்த்துக் கட்டப்பட்ட பின்னர், விடுதலைப் புலிகளுடனான எனது தொடர்புகள் குறித்து விசாரிக்கப்பட்டேன். அண்மையில் வெளிநாடு சென்றதற்கான காரணம் என்ன என்று கேட்டனர். என்னைக் கட்டி வைத்து அடிக்கத் தொடங்கினர். மின் வயரினால் அடித்தனர். சிகரெட்டினால் சுட்டனர். பெற்றோல் நிரப்பிய பொலித்தீன் பைக்குள் அமுக்கினர். பின்னர் அன்றிரவு, நான் சிறிய அறை ஒன்றுக்குள் கொண்டு செல்லப்பட்டேன். தொடர்ந்து மூன்று நாட்களாக நான் பாலியல் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தப்பட்டேன்" இவ்வாறு சாட்சியமளித்துள்ளவர்கள் எவரும் முறைப்படியாக விடுதலையாகவில்லை. அதிகாரிகளுக்கு உறவினர்கள் இலஞ்சம் கொடுத்தத்தை அடுத்து தப்பிக்க அனுமதிக்கப்பட்டவர்கள் என்றும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’