வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 14 பிப்ரவரி, 2013

கோப்பாய் மகாவித்தியாலய மேம்பாடு தொடர்பில் கலந்துரையாடல்



பா ரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை கோப்பாய் மகாவித்தியாலய அதிபர் தலைமையிலான குழுவினர் சந்தித்து பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் மேற்படி விடயம் தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
>இதன்போது பாடசாலையின் பௌதீக வளங்களை விருத்தி செய்து அதனூடாக மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. குறித்த பாடசாலையின் நூற்றாண்டு விழா அடுத்த மாதம் கொண்டாடப்படவுள்ள நிலையில் அதன் ஞாபகார்த்தமாக முத்திரையை வெளியிடுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. பாடசாலையின் தேவைகள் தொடர்பில் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அது தொடர்பில் தாம் துறைசார்ந்தவர்கள் ஊடாக கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளுவதற்கு இலகுவாக இருக்குமென்றும் அமைச்சர் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’