தற்சமயம் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலைமை மாற்றங்கள் காரணமாக விவசாயத் துறையில் ஏற்படும் பாதிப்புக்கள் அதற்கான மாற்றுவழிகள் தொடர்பாக ஆராய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் முக்கிய கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.வடபகுதியில் தற்சமயம் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றத்தின் காரணமாக விவசாயிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதுடன் பெரும் நட்டத்தினையும் அடைந்து வருகின்றனர். இவை தொடர்பாக குடாநாட்டின் விவசாய பிரதிநிதிகள் பலரும் அமைச்சரவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
குறிப்பாக வடபகுதியில் மாசி மாதத்தில் நிலவும் பனிக்காலத்தை கவனத்தில் கொண்டு கூடிய விளைச்சலைத் தரும் உருளைக்கிழங்கு செய்கையினை மேற்கொண்டோர் எதிர்பாராத வகையில் பெய்த மழை காரணமாக பலத்த நட்டத்தை அடைந்துள்ளனர். மேலும் மழை காரணமாக விளைச்சலுக்கு தயாராக இருந்த நெற்பயிர்ச் செய்கையும் மகரந்தச் சேர்க்கை இடம்பெறும் திராட்சைப் பழச் செய்கையும் பெரும் பாதிப்படைந்தள்ளன. இவை தொடர்பாக கூடிய கவனம் செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் துறைசார்ந்த பலருடனும் கலந்துரையாடி உள்ளதுடன் விசேட கூட்டம் ஒன்றிற்கும் அழைப்பு விடுத்துள்ளார். இம்மாத இறுதியில் விவசாயத் திணைக்களம் காலநிலை அவதான நிலையம் யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தினர் உள்ளிட்ட துறைசாhந்தோரின் பங்களிப்புடனும் விவசாய சம்மேளனப் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடனும் இடம்பெறவுள்ள இவ்விசேட கூட்டத்தில் முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டு கலந்துரையாடப்படுவதுடன் உரிய தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட உள்ளன. முக்கியமாக அசாதாரண காலநிலைமை மாற்றங்கள் காரணமாக விவசாயத் துறையில் ஏற்படும் பாதிப்புக்கள் அதற்கான மாற்றுவழிகள் தொடர்பாக ஆராயப்பட்டு விவசாயிகள் நட்டத்தை எதிர்நோக்காமல் பாதுகாக்கப்படும் வழிவகைகள் முன்னெடுக்கப்படும் என தெரியவருகின்றது. -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’