
அதன் பிரகாம் காணி கட்டளைச்சட்டத்தில் இன்னும் சில ஒழுங்கு விதிகள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளன என்று அமைச்சரவைப்பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அரச மற்றும் தனியார் காணிகளை வெளிநாட்டவருக்கு முழுமையாக விற்பனை செய்வதற்கு தடைவிதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவிருகின்றன. இராஜதந்திர மற்றும் தூதரகலாயங்களின் விவகாரங்களுக்கு இது பொருந்தாது என்றும் அவர் சொன்னார். தெற்கு கரையோரங்களில் காணிகளை வாங்கிய வெளிநாட்டு பிரஜைகள் அக்காணிகளில் ஹோட்டல்கள் மற்றும் மாளிகைகளை நிர்மானித்துள்ளனர். இதனால் அரசாங்கத்திற்கு எவ்விதமாக வருமானமும் இல்லை, வரிப்பணமும் கிடைக்காது என்றும் அவர் சொன்னார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’