இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் வெளித்தோற்றங்கள் மறைந்துவிட்ட போதும் அதற்கான மூல காரணங்கள் இன்னமும் மறையவில்லை என வெளிநாடு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தின் நாடாளுமன்ற இராஜாங்க உதவி செயலாளர் அலிஸ் ரையர் பேட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'யுத்தம் முடிய முன் புலிகள் வடக்கு, கிழக்கு மக்களை கொடூரமாக ஒடுக்கினர். மிருகத்தனமாக ஏராளமான மக்களையும் கொலை செய்தனர். இருப்பினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் உண்மையிலேயே வெறுக்கத்தக்க இந்த பயங்கர இயக்கத்தை தோற்கடித்தது. குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட வேண்டும். கொடூர செயல்களை புலிகள் செய்தாலும் அரச படைகள் செய்தாலும் அவற்றுக்கு காரணமானவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும். இதையே பிரித்தானிய அரசாங்கம் பொறுப்புக் கூறுதல் என்பதனால் கருதுகின்றது. நான் வடக்கிற்கும் தலைநகர் கொழும்புக்கும் சென்றேன். தமிழர்கள் தமது வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்ப முயல்கின்றனர். பல விடயங்கள் நடந்துள்ளன. பொருளாதாரம் வளர்கின்றது. யுத்தம் நடந்த இடங்களில் உள்கட்டுமான வேலைகள் விருத்தியடைந்துள்ளன. பல இடங்களில் நிலக்கண்ணிகள் அகற்றப்பட்டுவிட்டன. உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் குறைந்துள்ளனர். சிலர் அரசாங்கம் திட்டப்படி நல்லிணக்கம் செய்வதை நியாயப்படுத்துகின்றனர். ஒரு அரசியல் தீர்வு உருவாக சகல தரப்பினரும் செய்ய வேண்டியது நிறையவுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். அரசியலில் மக்களுக்கு பொறுப்புக்கொடுக்க மறுத்தல், குற்றமிழைத்தவர்களை பொறுப்புக்கூற வைக்கத் தவறினால் நீங்கள் எதிர்கால மோதலுக்கான விதையை விதைத்தவர்களாவீர்கள். இப்போது காயங்களை சுகப்படுத்த வேண்டிய நேரம். அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் செயற்படுத்துவது இதற்கான முதற்படியாக அமையும். 2013 இலங்கைக்கு முக்கிய வருடமாகும். எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வது பற்றி ஐக்கிய இராச்சியம் இன்னும் தீர்மானிக்கவில்லை. மாநாட்டை நடத்துபவர்கள் என்றவகையில் அவர்கள் பொதுநலவாயத்தின் விழுமியங்களான நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் என்பவற்றை கடைப்பிடிப்பதோடு நின்றுவிடாது அவற்றை முன்னெடுப்பவர்களாக வேண்டும்' என்று கூறியுள்ளார். -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’