இலங்கையின் 65வது சுதந்திர தினம் இன்று (04) திருகோணமலை நகரில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. “சுபீட்சமான தாய் நாடு ஒளிமயமான நாளைய தினம்” என்ற தொனிப் பொருளில் சுதந்திர தின பிரதான வைபவம் இம்முறை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை பிரட்ரிக் கோட்டைக்கு முன்பாக உள்ள கடற்கரையோரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறுகிறது. சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் தடவையாகக் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலையில் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதால் மிகப் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், நகர் முழுவதும் தேசிய கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக் கோலம் பூண்டுள்ளது. நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் நான்காவது சுதந்திர தினம் இதுவாகும்.

F
-->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’