ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை மட்டுமே முன்னெடுக்கவேண்டும். அதற்கு அப்பால் சென்று தனிப்பட்ட ரீதியிலான வேலைகளை செய்யமுடியாது என்று அக்
கட்சியின் தலைவர் ரணில் விக்ரம சிங்க அறிவித்துள்ளார்.
அவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக கைவிடுமாறு விசேட கட்டளையொன்றை நேற்று விடுத்துள்ளார். கட்சியின் யாப்பின் பிரகாரம் கட்சித்தலைமைத்துவத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாகவே இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்சியின் அரசியல் செயற்பாடுகளை கட்சியின் பொதுச்செயலாளர் தெளிவுப்படுத்துவார். அதற்கு அப்பால் சென்று பொதுவேலைகளை செய்யவேண்டுமாயின் கட்சி அ ங்கத்தவர் மற்றும் அமைப்பாளர் பதவிகளில் இருந்து விலகி பொதுவேலைகளை முன்னெடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’