ஒ ருவர் குற்றம் செய்தால் அவர் எவராக இருந்தாலும் அவருக்கு தண்டனை வழங்குவதே நீதிமன்றத்தின் மரபாகும் என்று பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்தார்.
கம்பளை விக்ரமபாகு தேசிய பாடசாலையில் இடம்பெற்ற செயலமர்வில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
குடிமகனொருவர் ஏதும் தவறு இழைப்பாராயின் சமூகம் அதற்கு எதிராக பொங்கி எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். யாராவது ஒருவர் தவறு செய்தால் சமுகம் அவரைக் குற்றவாளியாகக் காண்பது இயல்பு.
பொருளாதார ரீதியில் சமூக அமைப்புக்களை உயர்வடையச் செய்வதற்கு அரசு பல வழிகளிலும் முயற்சி செய்கிறது. இதற்கு மிகவும் இறுக்கமான சட்டதிட்டங்களைக் கொண்ட சமூக அமைப்பு முறை ஒன்று தேவை. அவ்வாறு இல்லாத பட்சத்தில் உயர்வடைய முடியாது.
நாட்டை அபிவிருத்தி செய்யும் பணியில் இன்று சுகாதார,தொழிட்நுட்ப மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான பல்வேறு வேலைத்திட்டங்களை அரசு முன்னெடுத்துச் செல்கிறது. காலியில் அமைக்கப்பட்டுள்ள மாகம்புர சர்வதேச துறைமுகம் போன்று சகல மாவட்டங்களிலும் உள்ளுர் விமான நிலையங்களை அமைக்கும் பணியில் அரசு முயன்று வருகிறது.
முப்பது வருட யுத்த முடிவின் பின் ஏற்பட்டுள்ள நிரந்தர சமாதானத்தினூடாக நாட்டை வளமாக்கும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. எம்நாட்டில் ஏற்படுத்தப்பட்டு வரும் பொருளாதார அல்லது பௌதீக வளர்ச்சி போன்று சமய ரீதியாகவும் ஓர் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. 2600 ஆவது புத்த ஜயந்தி தொடர்பான வேலைத்திட்டங்கள் ஊடாக சமய மறுமலர்ச்சிக்கான திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றை வெற்றிகரமாக முன் எடுப்பதே அரசின் முக்கிய நோக்கமாகும் என்றார்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’