ந டிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தை இலங்கையில் திரையிடுவதற்கு தடைவிதிக்கவில்லை. தற்காலிகமாக அந்த திரைப்படம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் தொடர்பில் இன்னும் இரண்டொரு நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
விஸ்வரூபம் படத்திற்கு இலங்கையில் தடைவிதிக்கவில்லை, தற்காலிகமாக அந்த திரைப்படம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் தொடர்பில் ஆலோசனை பெற்றுகொண்டிருக்கின்றோம்.
முஸ்லிம் பிரதிநிகள் உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தை பார்த்து தங்களுடைய விமர்சனங்ளை முன்வைத்துள்ளனர். தழிழகத்தில் என்ன நடக்கின்றது. தமிழக முதல்வர் ஜெயலலிதா எவ்வாறான முடிவுகளை எடுக்கின்றார் என்று நாம் காத்துக்கொண்டிருக்கவில்லை. உலகத்தில் என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்பதனை அவதானித்து கொண்டிருக்கின்றோம்.
நான் தாராளவாத கொள்கையை கொண்டவன் என்பதனால் இந்த திரைப்படத்தை திரையிட்டு மக்களின் விமர்சனத்திற்கு விட்டிருக்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும்” என்றார்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’