வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 17 ஜனவரி, 2013

குற்றப்பிரேரணையை எதிர்த்த சட்டவுரைஞர்கள், நீதிபதிகளுக்கு உயிராபத்து: ஐ.தே.க.


லாநிதி ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப்பிரேரணையை எதிர்த்த சட்டவுரைஞர்கள், நீதிபதிகள் ஆகியோர் உயிராபத்து ஏற்படக்கூடிய தாக்குதல்களுக்கு முகம் கொடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி இன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
விசேடமாக சட்டவுரைஞர் வெலியமுனவை தாக்குவதற்காக பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த டொல்பின் சந்தன என்பவர் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.க.வின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கூறினார். இந்த தாக்குதலை ஒரு விபத்துப்போல காட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த சதித்திட்டத்தில் பொலிஸார் சிலரும் உடந்தையாக உள்ளனர். ஐ.தே.க. இதை அவதானித்துவருகின்றது என அவர் கூறினார். முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் பாதுகாப்பில் சர்வதேச சமூகம் அக்கறையாக இருக்க வேண்டும் என அவர் கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் குற்றப்பிரேரணைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஒரு வார்த்தைகூடப் பேசாதபோது குற்றப்பிரேரணை பற்றியும் மொஹான் பீரிஸை பிரதம நீதியரசராக நியமித்தமை பற்றியும் பேசுவதற்கு ஐ.தே.க.வுக்கு என்ன அருகதை இருக்கின்றது எனக் கேட்டபோது, சமநலவாயத்தின் 'லற்றிமா ஹவுஸ்' முறையை அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை கேட்டார் எனவும் இதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது எனவும் அவர் கூறினார். ஷிராணி பண்டாரநாயக்கவின் பதவி விலக்கலுடன் இலங்கை உத்தியோகபூர்வமாக சர்வாதிகார நாடாக ஆகிவிட்டது என மங்கள சமரவீர கூறினார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’