வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 16 ஜனவரி, 2013

நாடு தற்போது தாழ்ந்து போயுள்ளதால் மாற்றம் அவசியம்: சந்திரிகா


போதைவஸ்து வியாபாரிகளையும் கொடுஞ்செயல் புரிவோரையும் முன்னுக்கு கொண்டுவரும் தலைவர்கள் காணப்படும் அளவுக்கு இந்த நாடு தாழ்ந்து போயுள்ளதால் மாற்றம் அவசியமாகின்றது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். 'தலைமைக்க பெண் கல்வி' எனும் கருப்பொருளில் புனித பிரிஜட் கொன்வென்ற் ஒழுங்குசெய்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா ஞாபகார்த்த உரையின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நாட்டின் நிலைமையைக் கண்டு தான் மனமொடிந்து விட்டதாக கூறிய குமாரதுங்க, இந்த நிலைமையிலிருந்து நாட்டை மீட்க தனக்கு வழி தெரியவில்லை எனக் கூறிய சந்திரிக்கா குமாரதுங்க, நாடு காணப்படும் கேவல நிலைபற்றி தான் பேச விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டார். மற்றவர்களின் உள்ளேயுள்ள மிருகத்தை கட்டுப்படுத்தி அவர்களின் நல்ல, மனிதாபிமான பண்புகளை வெளிக்கொண்டு வருபவரே நல்ல தலைவர். இவ்வாறான தலைவர்களே இதுவரை எட்டாத உயர்நிலைக்கு செல்லும் பலத்தை நாட்டுக்கு வழங்குவர். கூடாத தலைவர்கள் தனி மனிதர்களை அழிப்பதோடு மட்டுமன்றி முழு நாட்டையும் அழித்துவிடுவர் என அவர் கூறினார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அதிகாரம் தனக்கு அதிகாரத்தை வழங்கியவர்களின் சார்பில் தான் பேணும் நம்பிக்கைச் சொத்து என்பதை உணர்ந்து ஒரு உண்மையான தலைவர் செயற்படுவார் என அவர் மேலும் குறிப்பிட்டார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’