ரிசானா நபீக்கிற்கு நிறைவேற்றப்பட்டுள்ள மரணதண்டனையானது முழுநாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் ரிசானாவின் மரணதண்டனை நிறைவேற்றத்துக்கு காரணமான சவூதி அரேபிய நாட்டுத்தாயாருக்கு சவூதி அரசாங்கம் உரிய தண்டனையைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி நேற்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
திருகோணமலை மூதூரைச் சேர்ந்த ரிசானா நபீக்கிற்கு சவூதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் தனது அனுதாபத்தை வெளியிடுகையிலேயே அமைச்சர் பௌசி மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
ரிசானா நபீக் குற்றமிழைத்திருப்பதாக கருதப்பட்டு மரணதண்டனை விதிப்புக்குள்ளானார்.இது முழுநாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.ரிசானா ஒரு சிறுமியாவார்.
சிறுமியான அவரிடம் குழந்தையை பராமரிக்கவென அவரிடம் ஒப்படைத்தமை அந்தத் தாயின் தவறாகும். தனது குழந்தையை அவர் எவ்வாறு ஒரு சிறுமியிடம் ஒப்படைக்க முடியும்? இங்கு இந்தம் தாயும் குற்றமிழைத்துள்ளார்.
எனவே குறித்த தாய் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென சவூதி அரேபிய அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’