விஸ்வரூபம் திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிடுவது தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருப்பதாக எமது சென்னை அலுவலக செய்தியாளர் தெரிவிக்கிறார்.
இத்திரைப்படத்தின் சில காட்சிகளை மாத்திரம் நீக்க வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அதனை தமிழக அரசு முழுமையாக தடை செய்ய வேண்டும் எனக் கோரி 23 இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளன.
அவ்வாறு வழக்குத் தொடரப்படுமானால் விஸ்வரூபம் வெளியீடு மேலும் 10 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படலாம் என உத்தியோகபூர்வமற்ற செய்திகள் தெரிவிப்பதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார்.
இவ்விடயம் தமிழகத்தில் மீண்டும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே. வேங்கட்ராமன் தகவல் தருகையில், விஸ்வரூபம் விவகாரத்தில் சுமுகமான தீர்வு காண்பதற்கு அனைத்து விடயங்களையும் பரிசீலனை செய்ய வேண்டும். ஒருவருடைய தனிப்பட்ட உரிமைகளை விட தேசிய ஒருமைப்பாடு மிக முக்கியமானதாகும். தேசிய நலன், ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்பதான எந்தத் தீர்மானத்தையும் நாம் எடுக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’