ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரவிருக்கின்ற பிரேரணையை எதிர்கொள்வதற்கு தயாராகவும் நம்பிக்கையுடனும் இருப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாரத்ன அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரவிருக்கின்ற 'நேரடியான மற்றும் செயல்முறையிலான தீர்மானம் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்காக வரவு-செலவுத்திட்டத்தில் 1200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அந்த பரிந்துரைகள் மிகத்தெளிவாக அமுல்படுத்தப்படும்.
நாங்கள் ஜனாதிபதி செயலகத்துடன் மிக அண்மித்தே செயற்படுகின்றோம். ஜனாதிபதி செயலகமும் இதனை கண்காணித்துகொண்டு வருகின்றது. தீர்மானத்திற்கு அப்பால் சென்று செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என்பதனை தெளிவாக கூறமுடியும்.
இலங்கை அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அது குறித்து சர்வதேசத்திற்கு போதியளவு விளக்கமளித்துள்ளதாகவும் தெரிவித்த அவர் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவிருக்கின்ற விவகாரம் எந்தவிதமான பாதகங்களையும் ஏற்படுத்தாது என்றும் அவர் சொன்னார்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’