அ வுஸ்திரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 3ஆவது போட்டியில் இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சால் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.
பிறிஸ்பேணில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 26.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 74 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. முதலாவது விக்கெட்டை 4 ஓட்டங்களுக்கே இழந்த அவ்வணி, ஒரு கட்டத்தில் 9 விக்கெட்டுக்களை இழந்து 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இறுதி விக்கெட்டுக்காக மிற்சல் ஸ்ரார்க், ஷேவியர் டொகேர்ட்டி ஆகியோர் 34 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். துடுப்பாட்டத்தில் மிற்சல் ஸ்ரார்க் ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களையும், ஷேவியர் டொகேர்ட்டி 15 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எந்த வீரரும் இரட்டைப்படை ஓட்டங்களைப் பெற்றிருக்கவில்லை. பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக அற்புதமாகப் பந்துவீசிய நுவான் குலசேகர 10 ஓவர்களில் 22 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். லசித் மலிங்க 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், அன்ஜலோ மத்தியூஸ், ஷமின்ட எரங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 75 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 20 ஓவர்களின் நிறைவில் வெற்றி இலக்கை அடைந்தது. முதலாவது விக்கெட்டை 4 ஓட்டங்களுக்கே இழந்த இலங்கை அணி, இரண்டாவது விக்கெட்டை 33 ஓட்டங்களுக்கு இழந்தது. அதன் பின்னர் 4 விக்கெட்டுக்களை இழந்து 37 ஓட்டங்களைப் பெற்றுத் தடுமாறிய போதிலும், பின்னர் வந்த வீரர்கள் சிறப்பாக ஆடினர். துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக குஷால் ஜனித் பெரேரா ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களையும், திலகரட்ண டில்ஷான் 22 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக மிற்சல் ஜோன்சன் 3 விக்கெட்டுக்களையும், மிற்சல் ஸ்ரார்க் 2 விக்கெட்டுக்களையும், கிளின்ட் மக்காய் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இப்போட்டியின் நாயகனாக இலங்கை அணியின் நுவான் குலசேகர தெரிவானார். 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இலங்கை அணி 3 போட்டிகளின் நிறைவில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’