அவுஸ்திரேலியாவில் புகலிட கோரிக்கையாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பில் உத்தியோகஸ்தர்கள் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர்.
பப்புவா நியூகினி, மனுஸ் தீவுகளிலுள்ள அவுஸ்திரேலியா குடிவரவு தடுப்பு மத்திய நிலையத்திலேயே இந்த கைகலப்பு நத்தார் தினத்தன்று இடம்பெற்றுள்ளது.
ஏழு பேரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்த குடிவரவு அமைச்சரின் பேச்சாளர் கிரிஸ்போவன் தமிழ் அகதிகளுக்கும் ஈரான் அகதிகளுக்கும் இடையிலேயே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முகாமிலுள்ள இணையத்தள அறையொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிறு காயமடைந்தவர்கள் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். குறித்த நிலையத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் எவரையும் இதுவரையில் கைதுசெய்யவில்லை என்றும் தெரிவித்தனர்.
இந்த தடுப்பு முகாமில் இலங்கை,ஈரான்,ஈராக்,ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளைச்சேர்ந்தவர்களே தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு ஊடகம் செய்திவெளியிட்டுள்ளது.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’