இலங்கை சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரித்தானிய குடியுரிமை கொண்ட தமிழரை பிரித்தானிய சிறைச்சாலைக்கு மாற்றுவது தொடர்பில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரனுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
இதன்போதே பிரித்தானிய குடியுரிமை கொண்ட தமிழரை பிரித்தானிய சிறைச்சாலைக்கு மாற்றுவது தொடர்பில்; பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு இந்த விவகாரம் தொடர்பில் உத்தியோகபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்தால் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்று நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே புலம் பெயர்ந்த தமிழர்களை பயங்கரவாத மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கு இடையில் 1995 ஆம் ஆண்டு செய்துக்கொள்ளப்பட்ட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். 95/5 சட்டத்தின் பிரகாரமே கைதியை பரிமாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர்களுடைய பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’