இலங்கையில் தலைமை நீதிபதிக்கு எதிரான குற்றஞ்சாட்டி பதவிநீக்கம் செய்வதற்கான பிரேரணை தொடர்பில், நீதிபதிகளின் சந்திப்பு ஒன்று தலைமை நீதிபதிக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளது.கொழும்பில் இலங்கையின் பல பாகங்களைச் சேர்ந்த நீதிபதிகளின் சந்திப்பு ஒன்று திங்களன்று நடைபெற்றது.
இதில் மஜிஸ்ட்ரேட், மாவட்ட மற்றும் மேல்நீதிமன்ற நீதிபதிகள் சுமார் 150 பேர் கலந்துகொண்டனர். சுமார் இரண்டு மணிநேரம் இந்தக் கூட்டம் நடந்தது. தலைமை நீதிபதிக்கு எதிரான விசாரணைகள் சுயாதீனமானதாக இருக்க வேண்டும் என்றும் அந்த நீதிபதிகள் அரசாங்கத்தை கேட்டிருக்கிறார்கள். அதேவேளை, தலைமை நீதிபதிக்கு எதிரான குற்றச்சாடுக்களை விசாரிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது என்று அறிவிக்கக் கோரும் வகையில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. நீண்ட விசாரணைக்குப் பின்னரே இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதாக சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’