பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப்பிரேரணையை விசாரிப்பதற்கு பொதுநலவாய சபையின் நீதியரசர்கள் குழுவை தவிர மாற்று ஏற்பாடுகள் எதுவுமே இல்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவிக்கையில்,
குற்றப்பிரேரணையை விசாரிப்பதற்காக உள்நாட்டு நீதியரசர்கள் தலைமையில் நியமிக்கப்படும் சுயாதீன குழு மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை.
அதனால். பொதுநலவாய சபையின் சிரேஷ்ட நீதியரசர்கள் மூவர் அடங்கிய குழுவின் ஊடாக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றப்பிரேரணை விசாரிக்கப்படவேண்டும் என்றார்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’