வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 3 டிசம்பர், 2012

பிரபாகரன் கொல்லப்பட்டமை விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்தப்படவில்லை: சிறிதரன் எம்.பி.


தென்னாபிரிக்கா மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகள் சர்வதேசத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டதைப் போன்று தமிழ் மக்களுக்கும் அவ்வாறானதொரு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. எஸ்.சிறிதரன் இன்று சபையில் தெரிவித்தார். நெல்சன் மண்டேலா, யசீர் அரபாத் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆகியோர் கரந்தடிப் படைத்தலைவர்கள் என ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள். பிரபாகரன் கொல்லப்பட்டார் என்பது விஞ்ஞான ரீதியில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நீர்வழங்கல், வடிகாலமைப்பு நீர்ப்பாசன நீர்வள முகாமைத்துவ மற்றும் சுற்றாடல் ஆகிய அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’