தான் வெட்டிய குழிக்குள் விழுந்துள்ள இந்த அரசாங்கத்திற்கு அதிலிருந்து மீண்டெழுவதற்கான ஒளிமயமான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணையை விசாரித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையை மீண்டும் ஆராய்வதற்காக சுயாதீன குழுவை நியமிக்கப்போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளமை தொடர்பில் நாம் எமது கவனத்தை செலுத்தியுள்ளோம்.
அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள இந்த இறுதி சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
பொதுநலவாய அமையத்தின் சம்பிரதாயத்தின் பிரகாரம் பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகத்தினால் பெயர் குறிப்பிடுகின்ற நீதியரசர்கள் கொண்ட சுயாதீன மற்றும் பக்கச்சார்பற்ற குழுவின் ஊடாக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பிரேரணை குழுவின் அறிக்கையை மீண்டும் விசாரிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ நடவடிக்கை எடுப்பார் என தாம் நம்புவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’