வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 1 டிசம்பர், 2012

சஜித், தயாசிறி, தலதா, புத்திக எதிர்ப்பு


க்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்ரம சிங்கவின் தலைமைப் பதவியை மேலும் ஆறு வருடங்களுக்கு நீடிப்பதற்கான யோசனைக்கு அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட மூன்று எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த யோசனைக்கு நாடாளுமன்றக உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, தலதா அத்துகோரளை மற்றும் புத்திக பத்திரண ஆகியோரே எதிர்ப்பு தெரிவித்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் 54 ஆவது மாநாட்டை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மாநாட்டுக்கு சென்ற சகலரும் கடுமையாக உடற்சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அங்கு மேலதிக பாதுகாப்புக்கென பொலிஸார், ஆயுதம் தரித்த பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனத்துடன் குண்டாந்தடி ஏந்தியிருந்த படையினர், கறுப்பு உடையணிந்த விசேட கலகம் அடக்கும் படையினர் உட்பட 3000 க்கும் மேற்பட்ட படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’