பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் சில்ப 2012 கண்காட்சியும் விற்பனை சந்தையும் கொழும்பு பண்டாநாயக்க ஞாபகார்த்த மண்டபத்திலுள்ள சிறிமாவோ பண்டாநாயக்கா ஞாபகார்த்த கண்காட்சிக் கூடத்தில் இன்று (27) சம்பிரதாயப் பூர்வமாக அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய நகர அலுவல்கள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி மகிந்த சிந்தனைக்கமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சிறந்த தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டலுடன் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறைகள் நாடளாவிய ரீதியில் மிகவும் சிறப்பான முறையில் மேம்பாடு அடைந்து வரும் அதேவேளை, அதனூடாக கிராமிய பொருளாதாரமும் முன்னேற்றம் கண்டு வருகின்றது. அத்துடன் எதிர்காலங்களிலும் குறித்த அமைச்சின் ஊடாக பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு கிராமிய தொழில்துறைகள் மென்மேலும் வளர்ச்சியடைய வேண்டுமென்றும் தெரிவித்தார்.
இதில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயற்திட்டங்கள் மற்றும் கண்காட்சியின் நோக்கம் தொடர்பிலான விளக்கவுரையினை அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி நிகழ்த்தினர். நிகழ்வில் உரையினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிரதியமைச்சர் வீரகுமார திஸநாயக்க, ஆகியோர் நிகழ்த்தினர்.
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான தேசிய அருங்கலைகள் பேரவை, தேசிய வடிவமைப்புச் சபை, கைத்தொழில் அபிவிருத்திச் சபை, பனை அபிவிருத்திச் சபை மற்றும் வடகடல் நிறுவனம் ஆகியவற்றின் பங்களிப்புடன் நடைபெற்று வரும் இக்கண்காட்சி மற்றும் விற்பனை சந்தையில் 185 ற்கும் அதிகமான விற்பனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று தொடங்கிய இக்கண்காட்சி எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் நடைபெறவுள்ளது. இதனை பாடசாலை மாணவர்கள், தொழில்துறை வல்லுனர்கள், ஆர்வலர்கள், மக்கள் என பெரும்திரளானோர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்து காலை 10.00 முதல் இரவு 10.00 மணிவரை இக்கண்காட்சியினை பார்வையிடமுடியுமென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
முன்பதாக காட்சிக்கூடங்களை திறந்து வைத்த அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் அவற்றை பார்வையிட்டதுடன், அவை தொடர்பில் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி கேட்டறிந்தும் கொண்டனர்.
இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட அரச அதிபர் கமல் பத்மசிறி, மன்னார் மாவட்ட அரச அதிபர் சரத்ரவீந்திரா, நகர அலுவல்கள் அமைச்சின் செயலாளர் மகிந்த மகிவேவ, அமைச்சரின் ஆலோசகர் திருமதி ஜெகராஜசிங்கம், கனேடிய உயர்ஸ்தானிகராலய பிரதி உயர்ஸ்தானிகர் தெபர்ட் மக்லுகன், உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’