இ லங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கைக்கு இந்தியா செய்த உதவிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
வைகோவின் 'ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் ரத்தம்' என்ற நூலின் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பதிப்புகளுடன் இலங்கைப் போர் தொடர்பான இருவட்டு ஆகியவற்றை வெளியிடும் நிகழ்வு, டெல்லியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே வைகோ மேற்கண்டவாறு வலியுறுத்தினார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறுகையில், '2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இலங்கைக்கு ரேடார் கருவிகள், இராணுவ உதவி உள்ளிட்டவற்றை இந்திய அரசு வழங்கியது. இது நிரூபிக்கப்பட்ட உண்மைகள். இதை இலங்கை அரசும் தெரிவித்திருக்கிறது. போருக்குப் பிறகு தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் பெருமளவில் குடியேற்றப்பட்டு வருகின்றனர். இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழர்களின் நியாயமான கோரிக்கையான தனி அரசாங்கத்துடன் கூடிய தேசம் அமைக்க வேண்டும். இந்த பொது வாக்கெடுப்பை சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் நடத்த வேண்டும். போரின் போது இலங்கை இராணுவத்துக்கு இந்திய அரசு வழங்கிய உதவிகள் தொடர்பாக இந்தியாவில் விசாரணை ஆணைக்குழுவொன்று அமைக்க வேண்டும்' என்றார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’