வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 24 நவம்பர், 2012

பிரபாகரனுக்கு எதிரான வழக்கை கைவிட நீதிமன்றம் அனுமதி


வி டுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு எதிரான கொலை முயற்சி வழக்கை கைவிடுவதற்கு சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியது. 1982ஆம் ஆண்டு பிரபாகரன் மற்றும் பிற தமிழ்ப் போராளி அமைப்புகளின் தலைவர்கள் சென்னையில் தங்கியிருந்தனர். இந்நிலையில் 19.5.1982 அன்று சென்னை பாண்டி பஜாரில் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்பினரும், ஈழ மக்கள் விடுதலை இயக்க போராளி அமைப்பினரும் மோதலில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் பிரபாகரன் உள்ளிட்டோர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் பொலிஸார் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இலங்கையில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போரின்போது பிரபாகரன் உயிரிழந்து விட்டதால், அவருக்கு எதிரான இந்த வழக்கை கைவிட நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்று அந்த மனுவில் பொலிஸார் கோரியிருந்தனர். இந்த மனு 6ஆவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி கலியமூர்த்தி முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரபாகரனுக்கு எதிரான வழக்கை கைவிட பொலிஸாருக்கு நீதிபதி அனுமதி அளித்தார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’