பிரான்ஸ் நாட்டில் செயற்பட்டு வருவதாக கூறப்படும் விடுதலைப் புலிகள் இயக்கப் பிரிவொன்றின் தலைவராக கூறப்படும் விநாயகம் என்பவர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 8 ஆம் திகதி பரிசில் சுட்டுக்கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினரான நடராஜா மதீந்திரனின் கொலை தொடர்பிலேயே விநாயகம் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. பரிதி அல்லது ரீகன் என அழைக்கப்படும் மதீந்திரன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டளைத் தளபதிகளில் ஒருவர் என்பதுடன் பிரான்ஸிலுள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளருமாவார். ஐரோப்பாவில் செயற்பட்டு வருவதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகள் வலையமைப்பின் வெவ்வேறு பிரிவுகளுக்கிடையில் இடம்பெறும் மோதல்களே இக் கொலைக்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இக்கொலைக்கு இலங்கை அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமென அவரது மகள் குற்றஞ்சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது. -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’