தி ருவண்ணாமலையில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தை தமிழக அரசு கையகப்படுத்த சென்னை உயர்நீதி்மன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதி பொறுப்பிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட நித்தியானந்தா தற்போது போக்கிடம் இல்லாமல் அங்குமிங்குமாக போய்க் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் திருவண்ணாமலையில் உள்ள அவரது மடத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் மாநில அரசின் இந்து அறநிலையத்துறை திடீரென இறங்கியது.
இதுதொடர்பாக ஆசிரமத்திற்கு இந்து அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து இந்த முடிவை எதிர்த்து ஆசிரம மேலாளர் நித்ய பிராணானந்தா என்பவர் ஒரு வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் போட்டார்.
அதில் அரசின் முடிவுக்குத் தடை கோரியிருந்தார். அதை விசாரித்த நீதிபதி சந்துரு, திருவண்ணாமலையில் உள்ள இந்த ஆசிரமத்தை நித்தியானந்தா நிர்வாகித்து வரும் நிலையில் தற்போதுள்ள நிலைமையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 1 வாரத்திற்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
இதனால் இப்போதைக்கு திருவண்ணாமலை மடம் தப்பியுள்ளது.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’