வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 16 நவம்பர், 2012

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு தொடர்பான ஆலோசனைக் குழ அலுவலகத்தின் ஏழாவது கூட்டம்


ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரின் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு தொடர்பான ஆலோசனைக் குழ அலுவலகத்தின் ஏழாவது கூட்டம் இன்றைய தினம் பாராளுமன்றக் கட்டிடத்தின் 1வது இலக்க குழு அறையில் இடம் பெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ. என்டனி விக்டர் பெரேரா, புத்தளம் மாவட்டம் சார்பில் நான்கு தேவைகளை முன்வைத்து அவற்றை நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

கைப்பணித்துறை சார்ந்த பயிற்சிகளைப் பெற்றல், களிமண் அரைக்கும் இயந்திரம், உடலலங்கார மற்றும் உணவு தொழில்நுட்ப பயிற்சிகள் பெறுதல் மற்றும் கைத்தொழிற்சாலை அமைத்தல் போன்ற தேவைகள் அவரால் முன்வைக்கப்பட்டன.

களிமண் சார்ந்த சிறுகைத்தொழிலை முன்னேற்றும் வகையில் மின்சார இயந்திரங்களை பெற்றுக் கொள்வது தொடர்பில் குருனாகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இந்திக்க பண்டாரநாயக்க வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.

கித்துள் உற்பத்தி மேம்பாடு தொடர்பில் அமைச்சர் வாசுதேவ நானாயக்காரவும் கைப்பணித்துறை சார்ந்த உற்பத்திகளின் மேம்பாடுகள் மற்றும் சுய தொழில் முயற்சிகள் ஊக்குவிப்பு தொடர்பில் அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

கோரிக்கைகள் தொடர்பில் அவதானஞ் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விசேட தேவைகள் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் மூலம் அடுத்த வருடம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

களிமண் சார்ந்த கைப்பணிப் பொருட்களை ஏற்றுமதி தரத்தில் உற்பத்தி செய்வதற்கு உரிய தொழில்நுட்ப பயிற்சிகளை தனது அமைச்சு வழங்கும் என்றும் அதன் ஊடாக அக்கைப்பணிப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு இயலும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் மூலம் உரிய தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அப் பயிற்சிகளை பெறுகின்றவர்களுக்கு வாழ்வின் எழுச்சி திட்டத்தின் மூலம் மூலப் பொருட்களுக்கான உதவித் தொகையையும் வங்கிக் கடன்களையும் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இங்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பனை அபிவிருத்திச் சபை, தேசிய அருங்கலைகள் பேரவை மற்றும் தேசிய வடிவமைப்புச் சபை ஆகிய நிறுவனங்களின் 2010 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கைகளும் கணக்கு அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன.

பிரதி அமைச்சர்களான வீரகுமார திஸாநாயக்கா, சரண குனவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் அசன் அலி, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வீ. சிவஞானசோதி, ஆலோசகர் வீ. ஜெகராசசிங்கம், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் கே. தயானந்தா, இணைப்புச் செயலாளர்கள் ராஜ்குமார், சந்திரலால், மேலதிக செயலாளர்கள், நிறுவனங்களின் தலைவர்கள், பொது முகாமையாளர்கள் மற்றும் ஏனைய துறைசார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். 





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’