தென் ஆபிரிக்காவுக்கான இலங்கையின் அடுத்த பிரதி உயர் ஸ்தானிகராக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நியமிப்பதற்கு தென் ஆபிரிக்க அரசாங்கம் அங்கீகாரம் அளிக்கக்கூடும் என தென் ஆபிரிக்காவின் அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியதாக தென் ஆபிரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரு நாட்டின் தூதுவரை இன்னொரு நாடு ஏற்க மறுப்பது பொதுவாக நடப்பதில்லை எனக் கூறிய தென் ஆபிரிக்க அரசாங்கத்தின் சர்வதேச உறவுகள் திணைக்களத்தின் பேச்சாளரான கிளேஸன் மொன்யெலா இந்த நியமனத்தில் பிரச்சினை இருக்காது எனவும்; கூறினார். சவேந்திர சில்வா யுத்தக்குற்றம் தொடர்பான குற்றவாளியாக காணப்படவில்லை எனவும் அவர் கூறினார். இதேவேளை, தென் ஆபிரிக்காவுக்கான இலங்கையின் அடுத்த பிரதி உயர்ஸ்தானிகராக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நியமிப்பதற்கான திட்டம் ஒன்று உள்ளது என்பதை இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஷெஹான் ரட்னவேல் உறுதிப்படுத்தினார். தென் ஆபிரிக்க அரசாங்கம் இந்த நியமனத்திற்கான அங்கீகாரத்தை இதுவரையில் வழங்காதுள்ளதால், இந்த நியமனம் தொடர்பில் 100 வீதம் உறுதியாகக் கூறமுடியாது எனவும் அவர் கூறினார். இலங்கை இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவுத் தலைவராக சவேந்திர சில்வா செயற்பட்டிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட யுத்தத்தில் ஈடுபட்ட முக்கிய பிரிவுகளில் இவரது படைப்பிரிவு அடங்கியமை குறிப்பிடத்தக்கது -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’