வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 24 நவம்பர், 2012

தலித்களுக்கு எதிராக பிற சமூகத்தைத் தூண்டி விடுகிறார்: ராமதாஸ் மீது 'ரஜினிகாந்த்' புகார்!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீது வழக்கறிஞர் ரஜினிகாந்த் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். வழக்கறிஞர் ரஜினிகாந்த் 20 வழக்கறிஞர்களுடன் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு ஆகியோர் மீது புகார் கொடுத்தார். அந்த புகார் மனுவில், "தர்மபுரியில் நடந்த வன்முறை சம்பவங்களையொட்டி கடந்த 17ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு எம்.எல்.ஏ. ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். ராமதாஸ் அளித்த பேட்டியில் தலித் மக்கள் வாழும் பகுதிகளில் பிற சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களுக்கும், மாணவிகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்று கூறி உள்ளார். இந்த கருத்து தலித் மக்களுக்கு எதிராக பிற சமுதாயத்தை தூண்டி விடும் வகையில் உள்ளது. எனவே அவர் மீது வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல மாமல்லபுரத்தில் நடந்த விழாவில் காடுவெட்டி குரு தலித்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசி உள்ளார். எனவே, டாக்டர் ராமதாஸ், காடுவெட்டி குரு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அதில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’