இலங்கை ஒரு மோசமான நாடு என்றும் சுற்றுலாத்துறையினருக்கு உகந்த நாடு அல்ல என்றும் புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுத்து வருகின்ற பிரசாரம் பொய்த்துவிட்டது. ஏனெனில் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 3.5 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது' என்று பொருளாதார அபிவிருத்தி
பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
'இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களால் இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அங்கு செல்வதற்கு சுற்றுலாப் பயணிகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்துள்ள நிலையிலேயே புலம்பெயர் தமிழர்கள் பிரசாரங்களை முன்னெடுத்து வந்தனர்' என்றும் அவர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
'பிரித்தானியாவில் நடைபெற்ற உலக வர்த்தக சந்தையில் எமது கூடத்தை மண்டபத்தின் நுழைவாயிலேயே அமைத்திருந்தோம். இருப்பினும், அவ்விடத்திற்கு வருகை தந்தவர்களுக்கு குறிப்பிட்ட சிலரால் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
அந்த துண்டுப் பிரசுரங்களில் 'இலங்கை ஒரு மோசமான நாடு என்றும் சுற்றுலாத்துறையினருக்கு அது உகந்த நாடு அல்ல' எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் அவர்களின் பிரசாரம் இறுதியில் பொய்த்துவிட்டது.
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருகை தரவேண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையிலேயே 1.3 வீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏனைய நாடுகளில் இருந்து வருகை தருகின்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது' என்றார்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’