இ லங்கையின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக மீது அரசாங்கம் கொண்டுவந்துள்ள பதவிநீக்க கண்டன தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் விவரங்களை இலங்கை அரசாங்கம் தற்போது வெளியிட்டுள்ளது.தனது வருமானத்துக்கும் சொத்துகளுக்கும் அவர் முறையாக கணக்கு காட்டவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதன் மூலம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு அவர் அவப்பெயரை ஏற்படுத்திவிட்டார் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஷிரானிக்கு எதிராக மொத்தத்தில் 14 குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சுமார் இரண்டு கோடி ரூபாயை ரொக்கப் பணமாக கொடுத்து ஒரு சொத்து வாங்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்று தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை என்பதாக ஒரு குற்றச்சாட்டு அமைந்துள்ளது. தேசிய அபிவிருத்தி வங்கியின் கிளை ஒன்றில் ரூபாய் 3 கோடியே 40 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டுப் பணம் இவர் பெயரில் உள்ளது என்பது இன்னொரு குற்றச்சாட்டு. அதிகாரிகளிடம் தெரியப்படுத்தாமல் இருபது வங்கிக் கணக்குகள் இவரிடம் உள்ளன என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஷிரானியின் கணவர் பிரதீப் காரியவாசம் மீது ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கொழும்பில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது என்பதையும் இந்தக் கண்டனத் தீர்மானம் குறிப்பிடுகிறது. ஆனால் நீதிமன்றத்தின் சுதந்திரத்தை ஒடுக்கும் நோக்கில் பொய்யான குற்றச்சாட்டுகள் தலைமை நீதிபதி மீது கொண்டுவரப்படுவதாக அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் கூறுகின்றனர். ஜனாதிபதிக்கும் நீதித்துறையின் உயர்மட்டத்துக்கும் இடையில் கடந்த சில வாரங்களாக முறுகல் நிலை ஏற்பட்டுள்ள ஒரு சூழ்நிலையில், இந்த பதவிநீக்க கண்டன தீர்மானம் கடந்த வியாழனன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’