வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 3 நவம்பர், 2012

திவிநெகுமவை சட்டமாக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்த தயார்: பசில்



யர்நீதிமன்றம் அறிவுறுத்துமாயின் சர்வசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமாகவேனும் திவிநெகும சட்டமூலத்தை சட்டமாக்குவோம்' என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சூளுரைத்தார்.
'வடமாகாணண சபை இல்லாத நிலையில் வடமாகாண ஆளுநர் இந்த சட்டமூலத்துக்கு ஒப்புதலளிக்க முடியுமா? என்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு இப்போது சபாநாயகர் சமல் ராஜபக்ஷவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாடாளுமன்றத்தில் நவம்பர் 6 ஆம் திகதி அறிவிக்கப்படும். சில சமயம் இந்த சட்டமூலத்துக்கான மக்களின் ஒப்புதலை ஒரு சர்வசன வாக்கெடுப்பு மூலம் பெறவேண்டிய தேவையும் எழலாம். நாம் அதற்கும் தயாராகவுள்ளோம். நாம் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து இந்த சட்டமூலத்தை உரிய முறையில் சட்டமாக்குவோம். வீட்டுத்துறை பொருளாதார அலகுகளை அபிவிருத்தி செய்து நுண் நிதி நிகழ்ச்சித்திட்டம் மூலம் மக்களை வறுமையிலிருந்து மீட்பதே 'திவிநெகும இயக்கத்தின்' நோக்கம்' என்றார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’