வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 22 நவம்பர், 2012

தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்த உயர் நீதிமன்றம் பரிந்துரை


பிரதம நீதியரசர் தொடர்பான குற்றப் பிரேரணைக்கு எதிரான மனுக்களின் தீர்ப்பு வரும்வரை பிரதம நீதியரசர் தொடர்பான குற்றங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு, அதன் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை பரிந்துரை செய்துள்ளது. குற்றப்பிரேணை தொடர்பாக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவிற்கு எதிராக விசாரணை நடத்துவதை ஒத்திப்போடுவதை கவனத்தில் எடுக்க வேண்டும் எனும் பரிந்துரையை நீதித்துறை மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள பரஸ்பர விளக்கத்தின் அடிப்படையில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு அறிவிப்பதற்கு உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்தது. நீதிபதிகளான என்.ஜி.அமரதுங்க, கே.ஸ்ரீபவன, பிரியசத் தெப் ஆகியோர் கொண்ட நீதிபதிகள் குழாம் இந்த பரிந்துரையை செய்தது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’