2013 ம் ஆண்டின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கொட்டடி நமசிவாய வித்தியாலய விஞ்ஞானகூடம் கட்டிடம் பூர்த்தி செய்யப்படும் அதேவேளை, இசை அணிவகுப்புக்கான இசைக்கருவிகளும் பெற்றுத்தரப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதிமொழி வழங்கினார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கொட்டடி நமசிவாய வித்தியாலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற விஞ்ஞானகூடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இப்பாடசாலை நீண்டகால கல்விப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. அதேவேளை விஞ்ஞான கூடமொன்று இல்லாத நிலையில் தற்போது அது புதிதாக அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இப்பாடசாலைச் சமூகத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக விஞ்ஞான ஆய்வுகூடத்தின் மேற்தளம் 2013 ம் ஆண்டின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியினூடாக பூர்த்தி செய்து தரப்படும் அதேவேளை இப்பாடசாலையின் இசை அணிக்காக வாத்தியக் கருவிகளைப் பெற்றுத் தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் உறுதிமொழி வழங்கினார்.
அத்துடன் விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான செயன்முறை உபகரணங்களைப் பெற்றுத்தருவதற்கு துறைசார்ந்தவர்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், இப்பாடசாலையின் தரத்தை மேம்படுத்துவதற்கும், அபிவிருத்திக்கும் முழுமையான பங்களிப்பு வழங்கப்படுமென்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
முன்பதாக மாணவர்களின் இசை அணிவகுப்புடன் அமைச்சர் உள்ளிட்ட அதிதிகள் அழைத்துவரப்பட்டு ஆரம்பநிகழ்வுகள் இடம்பெற்றன.
தொடர்ந்து விஞ்ஞான ஆய்வுகூடத்தை அமைச்சர் திறந்து வைத்ததுடன், நினைவுக் கல்லும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் கணேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்), வடமாகாண கல்விப் பணிப்பாளர் செல்வராஜா, யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோர் உரை நிகழ்த்தினார்.
இவ்விஞ்ஞான ஆய்வுகூடம் மாகாண அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதித்திட்டத்தின் கீழ் PSDG 2.3 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டுள்ளமையும் இந்தப்பாடசாலையின் புனரமைப்புக்காக பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்), ஏற்கனவே இரண்டு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

-->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’