தற்போதைய மாகாணசபை முறைமையில் மாற்றம் தேவையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் கூறியமை அரசாங்கம் இதுவரை சர்வதேச சமுதாயத்தின் முன்னிலையில் ஏற்றுக்கொண்ட பல விடயங்களை மறுப்பதாக உள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்தது.
தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கு 13ஆவது திருத்தம் அர்த்தமுள்ள விதமாக செயற்படுத்தப்படுமென ஐக்கிய நாடுகளிடமும் இந்தியாவிடமும் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக தொடர்ந்து பேசிய சுமந்திரன் எம்.பி, '2009இல் ஐ.நா செயலாளர் பான் கி மூன் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையையும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையிடம் கையளித்த அறிக்கையையும் நினைவூட்டினார். 'இது நாட்டுக்கு நல்லதல்ல என்பதை நாம் தெரியப்படுத்த வேண்டியது எமது கடமை. அரசாங்கம் உலக அரங்கங்கள் பலவற்றில் தானாக முன்வந்து சில விடயங்களை பொறுப்பேற்றது. எமது நாடு சிறியது. நாம் மதம் பிடித்தவர் போல நடக்க முடியாது. வாக்குறுதிகளை மீற முடியாது. நாம் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு நினைத்த மாதிரி மீற முடியாது' என சுமந்திரன் எம்.பி கூறினார். 'அரசாங்கம் முதலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேசி ஒரு தீர்வை எட்ட வேண்டும். இந்த தீர்வை பின்னர் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த கட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்குபற்றும். எமது இந்த நிலைப்பாடு தெளிவாக எமது கூட்டறிக்கையில் உள்ளது' என அவர் விளக்கினார். -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’