வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 9 நவம்பர், 2012

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 875 ஏக்கர் நிலம் இராணுவத்தால் அபகரிப்பு


முல்லைத் தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சுமார் 875 ஏக்கர் நிலப்பரப்பு இன்று வரை இராணுவத்தினரின் பிடியில் உள்ளதுடன் பல வர்த்தக நிலைய கட்டிடங்களும் படையினரின் பயன்பாட்டிலேயே இருந்து வருகின்றன.
புதுக்குடியிருப்பு பகுதியில் கமநல சேவை நிலையத்தின் முன்பாக உள்ள பொன்னம்பலம் வைத்தியசாலை இயங்கிய பகுதி காணியும் அதனைச் சூழவுள்ள 10 குடும்பங்களின் ஆதனங்களும் புதுக்குடியிருப்பு சந்திப் பகுதியிலுள்ள வர்த்தக நிலைய காணிகள் என்பன அடங்கலாக சுமார் 15 ஏக்கர் காணி மற்றும் அதனுள் அடங்கும் வர்த்தக நிலையங்கள், பொதுமக்களின் வாழ்விடங்கள் என்பவற்றை இலங்கை இராணுவத்தின் 682 ஆவது படைப் பிரிவு ஆக்கிரமித்துள்ளது. இதேவேளை, புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் சுமார் 800 ஏக்கர் நிலப்பரப்பு பகுதியை இலங்கை இராணுவத்தின் 683 ஆவது படைப்பிரிவு ஆக்கிரமித்துள்ளது. இதனை விட புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 60 ஏக்கர் நிலப்பகுதியை இராணுவத்தின் 683 ஆவது படைப்பிரிவு ஆக்கிரமித்துள்ளது. இவ்வாறு பொதுமக்களுக்குச் சொந்தமான 875 ஏக்கர் காணி இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருப்பதனால் இக்காணிகளின் உரிமையாளர்கள் மீள்குடியேற முடியாமலும் வாழ்வாதரத் தொழில்களை செய்ய முடியாமலும் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’