வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 15 நவம்பர், 2012

மேலும் 32 புகலிடக்கோரிக்கையாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்: கிறிஸ் போவன்



படகுகள் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு அகதிகளாக சென்ற மேலும் 32 புகலிடக்கோரிக்கையாளர்கள் இன்று கிறிஸ்மஸ் தீவில் இருந்து விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக, அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார். இவர்களுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதியிலிருந்து அவுஸ்ரேலியா சென்ற புகலிடக்கோரிக்கையாளர்களில் 324 பேர் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
செல்லுபடியற்ற நுழைவிசா இல்லாமல் அவுஸ்ரேலியாவுக்குள் நுழைவோர், அங்கு தங்கியிருப்பதற்கு சட்டரீதியான உரிமையில்லை என்றும், அந்த வகையிலேயே இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் ஏனையவர்கள் கூடிய விரைவில் திருப்பி அனுப்பப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’