வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 14 நவம்பர், 2012

13ஆவது திருத்தமா? இரத்தா? சகலருடனும் பேச்சு: நிமல்


அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை திருதுவதா? அல்லது அதனை ரத்து செய்வதா? என்பது தொடர்பில் தமிழ்க் கட்சிகள் அடங்கலாக சகல கட்சிகளுடனும் பேசுவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்று சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை விடுத்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இவ்விடயத்தை நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சமர்ப்பிக்க அரசாங்கம் விரும்புகின்றது. அரசாங்கத்தின் பங்காளிகட்சிகள் 13ஆவது திருத்தத்தை ரத்து செய்யக் கோரினாலும் இது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கருத்து அல்ல. அரசாங்கத்தின் கருத்து, மஹிந்த சிந்தனையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அரசாங்கம் 13ஆவது திருத்தம் பற்றி பேச தயாராக உள்ளது. கிராம சபை, மாவட்ட சபை மற்றும் மாகாண அரசாங்கங்கள் பற்றியும் பேச அரசாங்கம் தயாராக உள்ளது. ஆயினும் ஒற்றையாட்சி நாடு என்ற அடிப்படையிலேயே எந்தவொரு தீர்வும் அமைய வேண்டுமென அரசாங்கம் வலியுறுத்தும். நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு எதிர்க்கட்சியினர் அங்கத்தவர்களை நியமிக்காததனால் அது செயற்படாது உள்ளது. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அவசரமாக 13ஆவது திருத்தம் செய்யப்பட்டதையும் அதில் குறைபாடுகள் உள்ளதையும் ஐக்கிய தேசிய கட்சி ஏற்றுள்ளது. இலங்கைக்கே உரித்தான ஒரு அதிகாரப் பகிர்வு முறையை அரசாங்கம் உருவாக்கும் என்பதை அரசாங்கம் சர்வதேச சமுகத்திற்கு தெளிவாக கூறியுள்ளது. அரசாங்கம் தேசியப் பிரச்சினையை சர்வதேசமயப்படுத்துவதை எதிர்க்கின்றது என்றார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’