வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 15 அக்டோபர், 2012

இலங்கை அணு விஞ்ஞானிகளுக்கு ஆபத்து: சம்பிக்க



லங்கை அணு விஞ்ஞானிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நோக்கிலேயே இலங்கையில் அணு ஆலைகளுக்கு பாகிஸ்தான் உதவி கிடைக்கின்றதென்னும் வதந்தி பரப்பப்படுவதாக மின் மற்றும் வலு அமைச்சரான பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியர்கள், இலங்கையர்கள் மற்றும் ஓர் இந்திய ஊடகங்களின் குழு ஆகியோர் அடங்கிய குழுவொன்று இவ்வாறு கதை கட்டிவிடுதவற்கு 2 நோக்கங்கள் உள்ளன. இலங்கையின் மின்னுற்பத்தி திட்டங்கள் மீது சந்தேகங்களை ஏற்படுத்தி இலங்கையை சர்வதேச ரீதியில் கறுப்புப்பட்டியலில் சேர்ப்பது ஒரு நோக்கம். ஈரானில் நடந்ததுபோல இலங்கையின் அணு விஞ்ஞானிகளையும் அழித்துவிடுவதினால் இலங்கையின் அணுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை தடுப்பது அடுத்த நோக்கமாகுமெனவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார். சம்பூரில் அணுமின்நிலையமொன்றை பாகிஸ்தான் அமைத்துத் தரவுள்ளதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் பச்சைப்பொய்யென அமைச்சர் கூறினார். தமிழ்நாடு மாநிலம் தவிர, வேறு மாநிலங்களில் இலங்கை எதிர்ப்பு போக்கு இல்லாதிருப்பதால் அம்மாநிலங்களையும் இலங்கைக்கு எதிராக தூண்டிவிடவும் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிரான வெறுப்பை உருவாக்கவும் இவ்வாறு செய்யப்படுவதாக அவர் கூறினார். உலகெங்கும் அணுவிஞ்ஞானிகளை இலக்குவைப்பதும் கொலைசெய்வதும் நடந்துவருகின்றது. உண்மையில் இலங்கையிடம் அணுமின்நிலையம் அமைக்கும் திட்டம் எதுவுமில்லை. அடுத்த 15 அல்லது 20 வருடங்களில் கூட இது நடக்கும் சாத்தியமில்லை. இவ்விடயத்தில் விழிப்புணர்வை உருவாக்கும் பொருட்டு வெவ்வேறு துறைகளிலும் நாம் அணுவிஞ்ஞானத்தை புகுத்துவதையே இப்போது செய்கின்றோமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறினார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’