வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 10 அக்டோபர், 2012

நாட்டுக்கு எதிரான எந்தவொரு சவாலுக்கும் முகங்கொடுக்க இராணுவம் தயார்: தளபதி



நாட்டுக்கு எதிராக விடுக்கப்படும் எந்தவொரு சவாலையும் தைரியமாக முகங்கொடுக்க இலங்கை இராணுவம் எப்போதும் தயாராக இருக்கின்றது' என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.
'பயங்கரவாதத்திலிருந்து வெற்றிகொள்ளப்பட்ட நாட்டின் அனைத்து இன மக்களுக்காகவும் முக்கியமாக வடக்கு கிழக்கு வாழ் மக்களின் அபிவிருத்திக்காக இராணுவம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் இன்று சர்வதேச அளவில் பாராட்டுதல்களைப் பெற்று வருகின்றன' என்றும் இராணுவ தளபதி சுட்டிக்காட்டினார். இலங்கை இராணுவத்தின் 63ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பிரதான நிகழ்வு கொழும்பு, சி.ஆர். அன்ட் எப்.சி மைதானத்தில் இராணுவ தளபதி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து அங்கு உரையாற்றிய இராணுவ தளபதி, 'பெருமைமிக்கதொரு வரலாற்றைக் கொண்ட எமது இலங்கை இராணுவமானது நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் ஒற்றையாட்சி ஆகியவற்றைப் பாதுகாப்பதில் பல்வேறு சவால்களுக்கும் முகங்கொடுத்துள்ளது' என்றும் கூறினார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’