பொதுநலவாய நாடுகளின் வர்த்தகச் சபையைச் சேர்ந்த பிரதிநிதிகள்; பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடி உள்ளனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
-கொழும்பு மருதானையில் அமைந்துள்ள அமைச்சுக்கு இன்றைய தினம் வருகை தந்த மேற்படி பிரதிநிதிகள் இக்கலந்துரையாடலில் பங்கெடுத்தனர்.
இதன்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்திட்டங்களில் சிறுகைத்தொழில்துறையை மேம்படுத்தும் நோக்கிலான விபரங்கள் அப்பிரதிநிதிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது.
அந்தவகையில் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வாழ்வெழுச்சி (திவிநெகும) திட்டத்தின் ஊடாக மாவட்டங்கள் தோறும் நடாத்தப்பட்ட கண்காட்சிகளுக்கு அமைய தற்போது மக்களுக்கு கிடைக்கப்பெற்றுவரும் பல்வேறு விதமான உதவித்திட்டங்கள் மற்றும் சலுகைகள் அத்துடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்கள் தொடர்பாகவும் இத்திட்டங்களுக்கு இந்திய மற்றும் இலங்கை அரசுகளின் நிதி மற்றும் இயந்திரசாதன உதவிகள் தொடர்பாகவும் விரிவாக விளக்கப்பட்டது.
இதன் பிரகாரம் அமைச்சின் கீழான பனை அபிவிருத்தி சபையினாலும், வடகடல் நிறுவனத்தினாலும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டங்கள் மற்றும் அச்சுவேலியில் அமையப்பெறவுள்ள கைத்தொழிற்பேட்டையின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்ட அதேவேளை அமைச்சின் ஏனைய நிறுவனங்களினது செயற்பாடுகள் தொடர்பாகவும், பிரதிநிதிகள் ஆவலுடன் கேட்டறிந்து கொண்டனர்.
சிறுதொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு அமைச்சு மேற்கொண்டு வரும் பல்வேறு செயற்திட்டங்களை மேற்படி பிரதிநிதிகள் குழுவினர் பாராட்டினர்.
பொதுநலவாய வர்த்தகசபை தலைவர் னுச. மொஹான் போல் தலைமையிலான இக்குழுவினருடனான கலந்துரையாடலின் போது அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, அமைச்சரின் ஆலோசகர் திருமதி. ஜெகராஜசிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.
->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’