முகாமைத்துவம் மற்றும் குறைந்த உற்பத்தித் திறன் காரணமாக கல்வியில் நெருக்கடி தோன்றியுள்ளது எனவும் சம்பள உயர்வு மற்றும் அரசின் கல்வி மீதான அதிகரித்த செலவினம் என்பவை இதனுடன் தொடர்புபடவில்லை எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க கூறினார். இலங்கையில் இலவசக் கல்வியின் எதிர்காலம் என்னும் பொருளிலான அரங்கம் ஒன்றில் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகங்களின் வினைத்திறனின்மை, பொருத்தமில்லாத கலைத் திட்டங்கள் காரணமாக கல்விச் சீர்த்திருத்தம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதிகரித்துவரும் பிரத்தியேக வகுப்புக்கள் கல்வியில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார். கல்வியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி பயங்கரமானது. சம்பளங்களோ, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் என்பதோ முக்கியமில்லை என அவர் கூறினார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’