வ ன பாதுகாப்பு அதிகாரிகளின் காரியலயத்தை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் ராஜு என்று அறியப்படுகின்ற பிரியந்த சிறிசேனவை கைதுசெய்து, நீதிமன்றில் ஆஜர்படுத்தி தகுந்த சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவரின் சகோதரரும் சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவை பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
என்னுடைய 25 வருடகால அரசியல் வாழ்க்கையில் நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, கட்சியின் பொதுச் செயலாளராக பதவிகளை வகித்துவந்தபோதிலும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை நான் ஆதரிப்பதில்லை. இத்தனைவருட அரசியல் வாழ்வில் என்னுடைய பதவியை துஷ்பிரயோகம் செய்யவோ, என்னுடைய அதிகாரத்தை பிறரிடம் திணிக்கவோ முற்படவில்லை. ஆகையினால், என்னுடைய சகோதரன் தப்பு பண்ணியிருந்தால் அவருக்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நான் ஒருபோதும் முட்டுக்கட்டையாக இருக்க மாட்டேன் என்றும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். ஊடக மத்தியநிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'இத்தாக்குதல் சம்பவம் தொடர்பான செய்தி கிடைத்தவுடன் பொலன்னறுவை பொலிஸாரையும் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளையும் தொடர்புகொண்டு என்னநடந்தது என்பது பற்றி அறியச் சொன்னேன். இச்சம்பவம் தொடர்பில் என்ன நடந்தது என்பதுபற்றி சரியாகத் தெரியவில்லை. இருந்தபோதிலும் நான் ஒரு மக்கள் பிரதிநிதி. பொலன்னறுவை மக்களால்தான் நான் தெரிவு செய்யப்பட்டேன். அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் நிச்சயமாக நான்தான் முதலில் நிற்பேன். சொந்த பந்தங்களுக்கு இங்கு இடமில்லை. குற்றத்தை யார் செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்படக் கூடியவர்களே' என்றும் அமைச்சர் மைத்திரிபால மேலும் கூறினார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’