வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 9 அக்டோபர், 2012

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல்தீர்வுக்கு சகல தரப்பினரும் ஒன்றிணைந்த பங்களிப்பை வழங்க வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா



மிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல்தீர்வுக்கு கட்சி பேதங்களுக்கப்பால் சகல தரப்பினரும் ஒன்றிணைந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்றையதினம் (8) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தலைமைதாங்கி உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது விவசாய நடவடிக்கைகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள, முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன்,  மழைநீர் வடிகால்களின் பராமரிப்புத் தொடர்பில் நீர்ப்பாசனத்திணைக்களத்தினது செயற்றிட்டங்கள், நல்லின கால்நடைகளை விருத்தி செய்து அதனூடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இதனிடையே குடாநாட்டில் கடற்பிரதேசங்களில் வெளியூர் மற்றும் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய தொழில்நடவடிக்கைகள் மற்றும் தடைசெய்யப்பட்ட தொழில்களை மேற்கொள்வதால் எமது கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் இடர்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், இது தொடர்பிலான தீர்மானமொன்றும் கொண்டுவரப்பட்டது.

அத்துடன் தடைசெய்யப்பட்ட மற்றும் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாது எனவும், அது தொடர்பில் உரிய நடவடிக்கை துறைசார்ந்தோரூடாக எடுக்கப்படுமெனவும் அமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

உயர்பாதுகாப்பு வலயம் மீள்குடியேற்றம் மற்றும் படைத்தரப்பினரிடம் உள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்பில் கவனத்தில் செலுத்தப்பட்டதுடன், இவை தொடர்பான விசேட அபிவிருத்திக்குழுக் கூட்டம் நவம்பர் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன்,  ஏ9 வீதியில் இயக்கச்சி சந்தியின் அடிக்கடி ஏற்படும் வீதிவிபத்துக்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் மக்கள் அனைவரும் தங்கள் தங்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யவேண்டும் என்பதில்  எமக்கு மாற்று கருத்து இல்லை மக்களின் நிலங்கள் அந்த மக்களுக்கே உரியது என்ற நிலைப்பாட்டிலும் நாம் உறுதியாக இருக்கின்றோம். இதற்காக நாம் பல்வேறு நடவடிக்கைகளை  எடுத்து அதில் கணிசமான முன்னேற்றங்களையும் கண்டுள்ளோம் படையினரிடம்  உள்ள தனியார் வீடுகள் அந்தந்த மக்களிடம் மீள ஓப்படைக்கப்படும் என படையினரும் உத்தரவாதம் அளித்துள்ளனர் எனவே இந்த விடயம் தொடர்பில்  எல்லோருக்கும் இருகின்ற ஆதங்கமே எம்மிடமும் இருக்கிறது

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இயல்புச் சூழலில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது யுத்த காலத்தில் மக்களுக்கு இருந்த பல்வேறு தடைகள் தற்போது இல்லை இயல்புச் சூழலின் பயனை மக்கள் தற்போது அனுபவித்து வருகின்றார்கள் மீள்குடியேற்றம் தொடர்பிலும் படிப்படியாக முன்னேற்றங்கள் ஏற்பட்டுவருகிறது வலி வடக்கு பிரதேசத்தில் 21 கிராம அலுவலர் பிரிவுகளில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் அத்தோடு 08 கிராம அலுவலர் பிரிவுகளில் அரைவாசிப்பகுதியிலும் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் எனவே இதேபோன்று ஏனைய பிரதேசங்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் படிப்படியாக முன்னேற்றம் காணவேண்டும் எனவே இதனை அரசியல் ஆதாயத்தோடு அணுகாமல் மக்களின் நலன்கருதி செயற்பட்டு தீர்வு காண வேண்டும்

மேலும் கடற்றொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் திருவடிநிலை போன்ற பிரதேசங்களில் பல தொழிலாளர்கள் கடற்றொழி;ல் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள விடயம் மற்றும் சுண்டிக்குளம் பிரதேசத்தில் அந்த பிரதேச கடற்றொழிலாளர்கள் தொழிலினை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டு தென்னிலங்கை கடற்றொழிலாளர்கள் சுண்டிக்குளம் கடலில் தொழிலில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றமை தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்

இதேவேளை, மேலும் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில் ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலன்ரின் (உதயன்), வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா மற்றும் திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.











 -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’