ஐக்கிய தேசிய பிக்கு முன்னணியினரின் ஏற்பாட்டில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் பங்கேற்பில் எதிர்வரும் 18ஆம் திகதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணியில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் பங்குபற்றினால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் செயற்குழு இன்று அறிவித்தது.
மேற்படி பேரணியில் பங்குபற்றவுள்ள உறுப்பினர்களைத் தடுக்கும் வகையிலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. 18ஆம் திகதி நடைபெறவுள்ள மேற்படி மக்கள் பேரணியில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களான கரு ஜயசூரிய, தயாசிறி ஜயசேகர, பாலித்த ரங்கே பண்டார மற்றும் அசோக்க அபேசிங்க ஆகியோர் கலந்துகொள்ளப்போவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’