வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 11 அக்டோபர், 2012

5 ஆண்களைக் காணவில்லை: பெற்றோர்கள் முறைப்பாடு



கிளிநொச்சி மாவட்டத்தில் ஐந்து ஆண்கள் காணாமல் போயுள்ளதாக அவர்களின் பெற்றோர்கள் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று புதன்கிழமை முறையிட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் நடமாடும் மனித உரிமைகள் அலுவலகத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் சந்திப்பு பிரதி புதன்கிழமைகளில் நடைபெறுகின்றது. இந்த சந்திப்பின் 12 முறைப்பாடுகள் அன்றைய தினம் கிடைக்கப் பெற்றுள்ளது. அதில் ஐந்து முறைப்பாடுகள் கடந்த 2009ஆம் ஆண்டில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் காணாமல் போயுள்ளவர்கள் பற்றியதாகும். இவர்கள் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. எங்கள் பிள்ளைகள் இருக்கின்றார்களா? இல்லையா? என யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு பதில் சொல்ல வேண்டும் என உருக்கமான முறையில் முறையிட்டுள்ளதாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் மேலும் தெரிவித்துள்ளார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’