20 வருடங்களின் பின்னர் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மாதகல் மேற்குப் பகுதி மக்கள் இன்றைய தினம் மீளக் குடியேறியுள்ளனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கடந்த (17) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாதகல் மேற்கு பகுதிக்கு நேரில் சென்று அவ்விடத்தினைப் பார்வையிட்டு கடற்படையினர், பிரதேச செயலாளர், கிராமசேவையாளர்கள், பொதுமக்கள் எல்லோரையும் அழைத்து கலந்துரையாடியதன் பயனாக 22.10.2012 அன்று மாதகல் மேற்கு பகுதிகளுக்கு மக்கள் மீள்குடியேற்றப்படுவர் என அமைச்சர் வாக்குறுதியளித்ததன் பிரகாரம் இன்றைய தினம் இம்மக்கள் தமது சொந்த இடங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஈ.பி.டி.பியின் மானிப்பாய் பிரதேச அமைப்பாளரும், வலிதென்மேற்கு பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவருமான வெலிச்சோர் அன்ரன் ஜோன்சன் (ஜீவா) அவர்கள், விடுவிக்கப்பட்ட குறித்த பகுதியில் மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று காணி துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், அப்பகுதியில் மீள்குடியேறும் மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் வாழ்வாதார உதவிகள் அத்துடன் இந்தப் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு மற்றும் வீதி, மின்சாரம் உள்ளிட்ட தேவைகள் தொடர்பில்;கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் கடந்த 16 சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற மாதகல் பகுதி மக்களுக்கான கலந்துரையாடலில் மாதகல் மேற்கு, மாதகல் கிழக்கு குருமன்துறை வீதி பகுதி மீள்குடியேறிய மக்களுக்கு இந்திய வீட்டத்திட்டம் வழங்கப்படுமெனவும் உறுதியளித்துள்ளார் என்பதையும் இதன் போது வலிதென்மேற்கு பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் முரளிதரன், உதவிதிட்டமிடல் பணிப்பாளர், கிராமசேவையாளர், கடற்படையினர், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
-->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’