வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 19 செப்டம்பர், 2012

மாகாண சபை தேர்தல் முடிந்தது அரசு வரிகளை அதிகரித்துள்ளது: ஜயலத்



மாகாண சபை தேர்தல் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்து மக்களை ஏமாற்றிய அரசாங்கம், தேர்தல் முடிந்த கையோடு பொருட்களுக்கான வரிகளை அதிகரித்துள்ளது என ஐ.தே.க. எம்.பி. டாக்டர் ஜயலத் ஜயவர்தன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நீர் கட்டணத்தை உயர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். விசேட பண்ட அறவீட்டு சட்டத்தின் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், சாதாரண மக்களின் வாழ்க்கையோடு விளையாடும் விதத்திலேயே வரிகளை அரசாங்கம் அதகரித்துள்ளது. பருப்பு, கருவாடு, டின்மீன் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஊழல் மோசடிகளை மறைத்துக் கொள்வதற்காகவே இவ்வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’