ப ச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் வாழ்கின்ற காணியற்ற ஐநூறுவரையான குடும்பங்களுக்கு இப்பகுதியிலேயே காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்கான செயற்பாடுகள் இவ்வருட இறுதிக்குள் ஆரம்பமாகும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
-->மீளமைக்கப்பட்ட பச்சிலைப்பள்ளி பிரதே செயலகத்தினை திறந்து வைத்து உரையாற்றும்; போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில். கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதேச செயலகங்களில் பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலக கட்டிடமே முதன் முதலாக மீள்நிர்மாணம் செய்யப்பட்டு மக்களின் சேவைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது இம்மக்களுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதமென்றே கூறமுடியும். அத்தோடு இச்செயலகம் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்கின்ற நிர்வாக செயற்திறனுடன் இயங்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு எனக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிவிரைவான அபிவிருத்தியை எட்டிவரும் பிரதேச செயலர்பிரிவும் இப் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவு என்பதை எவராலும் மறுக்க முடியாது என குறிப்பிட்டார்.
அத்தோடு இப்பகுதி மக்களின் ஏனைய தேவைகளையும் நிறைவு செய்வதற்கு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நாளை இந்நாட்டின் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் மாவட்ட மக்களின் ஏனைய தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான வழிவகைகள் உருவாக்கம் பெறும். குறிப்பாக மீள்குடியேற்றத்தின் பின்னரான அபிவிருத்தி மற்றும் தொழில்வாய்ப்பு மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர்பிரச்சினை போக்குவரத்து, வீதிப்புனரமைப்பு வீட்டுவசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்போன்ற பலவிடயங்கள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு தீர்வுகள் எட்டப்படும். எனவும் பாராளுமன்றஉறுப்பினர் குறிப்பிட்டார்.
இதேவேளை பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் வாழ்கின்ற காணியற்ற சுமார் ஐநூறுவரையான குடும்பங்களுக்கு இப்பகுதியிலேயே காணிகளை வழங்குவதற்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அவர்களின் உறுதுணையுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அச்செயற்பாடுகள் இவ்வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் அத்தோடு காணிகளைப் பெறும் மக்களுக்கு வீட்டுவசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்தகால யுத்தத்தினால் சேதங்களுக்குள்ளான பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலகக் கட்டிடத் தொகுதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வடக்கின் துரித மீள்ச்சித்திட்டத்தின் கீழ் சுமார் பதினெட்டு மில்லியன் ரூபா செலவில் மீள்நிர்மாணம் செய்யப்பட்டது.
இக்கட்டிடத் தொகுதியினை இன்று அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச அவர்களும,; பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்களும் இணைந்து திறந்து வைத்தனர். இதேவேளை பச்சிலைப்பள்ளி சோரன்பற்றில் சுமார் 18இலட்சம் ரூபாசெலவில் அமைக்கப்பட்ட பச்சிலைப்பள்ளி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் விற்பனைக் கிளையினையும் இவர்கள் இன்று திறந்துவைத்தனர்.
இந்நிகழ்வுகளில் பச்சிலைப்பள்ளி பிரதேசசபையின் தவிசாளர் டொமினிக் அன்ரன் பிரதேசசபை உறுப்பினர்களான அன்ரன் அன்பழகன் தியாகராஜா ஆகியோரும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் கரைச்சி பிரதேசசெயலர் நாகேஸ்வரன் கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் முருகவேல், திணைக்களங்களின் தலைவர்டகளும் அரச உத்தியோகஸ்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’